தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசியல் எங்களுக்குத் தொழில் அல்ல, கடமை - கமல்ஹாசன் பதிலடி! - MNM Kamal Haasan slams BJP vanathi srinivasan news

கோவை: அரசியல் தொழில் அல்ல, கடமை என பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு, கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

“அரசியல் எங்களுக்குத் தொழில் அல்ல, கடமை”
“அரசியல் எங்களுக்குத் தொழில் அல்ல, கடமை”

By

Published : Mar 16, 2021, 1:45 PM IST

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதனையொட்டி நேற்று (மார்ச் 15) வேட்பு மனு தாக்கல் செய்த அவர், மாலை கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் பரப்புரை பொது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அபோது பேசிய அவர், “சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தொகுதியை ஏன் தேர்வு செய்தீர்கள் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நான் ஏன் போட்டியிடக்கூடாது?

234 தொகுதிகளிலும் என் உறவுகள் உள்ளனர், ஆரம்பத்தில் இருந்தே சாதி,மதம், நாத்திகன் என என்னை அடைக்க முயன்றனர்.
மயிலாப்பூரில் என் உறவினர்கள் உள்ளதால், அங்கு நிற்பேன் என்றார்கள். ஆனால் அங்கும் என் உறவினர்கள் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் நடிக்கப் போய்விடுவேன் என சொல்கின்றனர். நடிப்பு என் தொழில். ஆனால் எதிர்கட்சியினருக்கு அரசியல்தான் தொழில். இந்த வித்தியாசம் காரணமாகவே, நீங்கள் தோல்வியை தழுவப்போகிறீர்கள். கிரிமினல்கள் அந்த இரு கட்சிகளிலும் உள்ளனர். எது பெட்டர் சாய்ஸ் என்பது உங்களுக்கு தெரியும்.

“அரசியல் எங்களுக்குத் தொழில் அல்ல, கடமை”

இந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயர் கோவைக்கு இருந்தது.முதலில் ஆட்சியில் இருந்தவர்கள், மின் வெட்டால் தொழில்களை வேறு மாநிலத்திற்கு ஓடிவிடும்படி செய்தார்கள். அடுத்து ஆட்சியில் இருந்தவர்கள், கடன் சுமையை ஏழு லட்சம் கோடியாக மாற்றி உள்ளனர். தண்ணீர் இல்லாத ஊரில் வாசிங் மிஷன் கொடுப்பதாக சொல்கின்றனர். ஆளத் தகுதியும், ஆளும் தன்மையும் ஆட்சியாளர்களுக்கு இல்லை, எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் சாதனையாளர்கள்” என்றார்.

இதையும் படிங்க...முதலமைச்சரின் ஷாக் நியூஸ் முதல் துரைமுருகனின் கலாய்வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

ABOUT THE AUTHOR

...view details