தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா சிகிச்சை மையம்: பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்! - Corona Treatment Center system in coimbatore

கோயம்புத்தூர்: அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

கரோனா சிகிச்சை மைய அமைப்பு பணிகளை அமைச்சர்கள்
கரோனா சிகிச்சை மைய அமைப்பு பணிகளை அமைச்சர்கள்

By

Published : May 19, 2021, 7:51 AM IST

கோயம்புத்தூரில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இதேபோல் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் தட்டுப்பாட்டை குறைக்கும் நடவடிக்கையாக கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய தற்காலிக கரோனா சிகிச்சை மையத்துக்கான அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதனை கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா, கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:ஊரடங்கால் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details