கோயம்புத்தூர்:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரு நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்ற மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று வெறும் எட்டு மாதங்களில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட முதலமைச்சர் திறம்பட செயல்பட்டு வருகிறார்.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவரது செயல்பாடுகளை அனைத்து தரப்பினருமே பாராட்டுகின்றனர். ஆகவே, தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் திமுக மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களிப்பார்கள்.