தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வுசெய்த செந்தில்பாலாஜி - அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் ஆய்வு

கோவையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் செந்தில்பாலாஜி (Minister Senthil Balaji) ஆய்வுசெய்து சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் ஆய்வு
அமைச்சர் செந்தில் பாலாஜி

By

Published : Nov 18, 2021, 2:23 PM IST

கோயம்புத்தூர்: வடகிழக்குப் பருவமழை அதிக அளவு பெய்ததையடுத்து பல இடங்களில் குளங்கள் நிரம்பியுள்ளன. மேலும் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி (Minister Senthil Balaji) வாலாங்குளத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர்,

"அதிகப்படியாகப் பெய்த வடகிழக்குப் பருவமழையால் 26 குளங்கள் நிரம்பியுள்ளன. ஏழு பள்ளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. எனினும் பாதிப்பு இல்லாத அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பல இடங்களில் மின் வெட்டு என்று பொய்ப் பரப்புரையை மேற்கொள்கிறார்கள். பாதிப்பு உள்ள பகுதியைத் தெரிவித்தால் உடனடியாக மின்சார விநியோகம் அளிக்கப்படும்" எனக் கூறினார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி

150 இடங்களில் மக்கள் சபைக் கூட்டம் நடத்தி மக்களிடம் மனுக்களைப் பெற்றுள்ளதாகவும், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார். கோவை மாநகராட்சியில் சாலைகள் மிக மோசமாக உள்ளதால் சிறப்பு நிதி பெற்று அவை சீர்செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி: இந்த மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details