கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் செந்தில்பாலாஜி கோவையில் நேர்காணல் செய்தார். அப்போது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்த செந்தில்பாலாஜி, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தலில் 96 விழுக்காடு வெற்றியைப் பெற்றுள்ளோம். இது முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி அடிப்படை வசதிகள் ஏதும் அதிமுக ஆட்சியில் செய்யவில்லை.
கோவை மாவட்டம் முழுவதும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் இன்று (பிப்ரவரி 26) உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் சந்திப்பில் அந்தந்த வார்டுகளில் உள்ள பொதுவான பிரச்சினைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தயாரிக்கக் கூறியுள்ளோம்.
அடுத்த ஐந்தாண்டுக்கான பணிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுகின்றது. இதுபோன்ற பட்டியலைத் தயார்செய்து, சிறப்பு நிதி பெற்று மாவட்டம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படும். கோவை மாவட்டத்தில் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு வரப்பட்ட நிதி வகை மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணை நடைபெற்றுவருகிறது. உள்ளாட்சித் தேர்தல் அடிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது. கோவையில் வித்தியாசம் பார்க்காமல் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துப் பணிகளும் செய்து கொடுத்துள்ளார்.
ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது.
ஆதார் கட்டாயம் என்ற நடைமுறை கொண்டுவர திட்டமா?
இதில் நல்ல தீர்ப்பு வரும், சூயெஷ் நிறுவனம் குடிநீர் வழங்க மேற்கொள்ளும் பணிகள் முக்கால்வாசி முடிந்துவிட்டன. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேயர் பதவி கேட்பவர்கள் கடிதம் கொடுத்துவருகின்றனர்.