கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகேயுள்ள பேரூராட்சிகளில் ஒடையகுளம், வேட்டைகாரன்புதூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, ஜமீன் ஊத்துக்குளி, வால்பாறை நகராட்சி, சோலையார் அணை, முடீஸ் ஆகிய பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது,
இதில் வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விவசாயிகளின் பிரச்சினை குறித்து மனுக்கள் அளித்தனர். பின் அமைச்சர் கூறுகையில், “கோவையில் 100 வார்டுகளில் மனுக்கள் பெறப்பட்டு துறைசார்ந்த அலுவலர்களால் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில் பெறப்பட்ட மனுக்கள் தீர்வு காணப்படாததால் தற்போது மக்கள் சபை கூட்டம் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் துறைசார்ந்த அலுவலர்கள் நேரில் சென்று தடையில்லா மின்சாரம் வழங்கவிரைவில் தீர்வு காணப்படும்.