தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மிரட்டும் தொனியில் பேசினால் நடவடிக்கை - எச்சரித்த செந்தில்பாலாஜி - action would be taken if government officials spoke in a threatening manner

இனிவரும் காலங்களில் அரசு அலுவலர்களை மிரட்டும் தொனியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரித்தார்.

மைச்சர் செந்தில் பாலாஜி
மைச்சர் செந்தில் பாலாஜி

By

Published : Dec 11, 2021, 11:21 AM IST

கோவை:நேற்று (டிசம்பர் 10) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள், 71 மாற்றுத்திறனாளிகள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய பணி நியமன ஆணைகள் உள்ளிட்டவற்றை செந்தில்பாலாஜி வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அவர், "மாற்றுத்திறனாளிகள் நலத் துறையை, முதலமைச்சர் தனது துறையாக எடுத்துச் செயல்படுத்திவருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து அரசு நலத்திட்டங்களும் சேர வேண்டும் என்பதற்காக வீடு வாரியாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளரைச் சந்தித்த அவர், "இன்றுமுதல் (டிசம்பர் 10) கோவை மாவட்டத்தில் வீடு வாரியாகப் மாற்றுத்திறனாளிகள் தேவைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்க உள்ளது. இப்பொழுது மாற்றுத்திறனாளிகள் அவர்களது தேவைகளைக் குறிப்பிட்டால் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விமான நிலையம் விரிவாக்கப் பணிகள்

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் அவர்களுக்குத் தேவையான கோரிக்கைகள் கேட்டு பெறப்பட்டு நிவர்த்திசெய்யப்படும். அதிமுகவினர் அவர்களுடன் பயணித்தவர்களைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் இருக்கின்றனர்.

அவர்கள் அரசு அலுவலர்களை ஒருமையில் பேசுவது போன்ற செயல்களை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற அவர்கள் தொடர்ந்து செயல்பட்டால் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒருவருக்கு தோல்வி பயம் வரும்போதுதான் கோபம் வரும்; அந்நிலையில்தான் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கின்றனர். அரசு மதுபான கடைகளைப் பொறுத்தவரை மக்கள் இடம்பெயர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் 134 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மத்திய அரசு கொண்டுவரவுள்ள மின்சாரத் திருத்த சட்ட மசோதாவைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு ஒரு கேள்விக்குறியான சட்டம் என்பதால் இதனை எதிர்த்து முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இனி வரும் காலங்களில் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Helicopter Crash தொடர்பாக முப்படை விசாரணை - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details