கோயம்புத்தூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிக்காக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 92.95 லட்சம் மதிப்பீட்டில் மக்கும் குப்பைகளை சேகரிக்கும் 13 வாகனங்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 35.75 லட்சம் மதிப்பீட்டில் மக்காத கழிவுகளை சேகரிக்கும் ஐந்து வாகனங்கள் என மொத்தம் 18 வாகனங்களின் செயல்பாட்டை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சியில் கழிவு நீர் சேகரிக்கும் வாகனங்களை அமைச்சர் தொடக்கி வைப்பு - ஸ்மார்ட் சிட்டி திட்டம்
கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி பகுதிகளில் ஒரு கோடியே 28 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவு நீர் சேகரிக்கும் 18 வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
மேலும், மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் கட்டட கழிவுகளை கொண்டு பயனற்ற குவாரிகளை புனரமைத்து பயனுள்ள நிலமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டு, அதற்காக கட்டட கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் மண்டலத்துக்கு ஒன்று என்ற வீதத்தில் ஐந்து வாகனங்களையும் அமைச்சர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.