கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
முக்கியமாக, கோவை மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதுவும் தடையில்லாமல் குடிநீர் விநியோகம் நடைபெற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர், மேயர் மற்றும் துணை மேயர் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து பில்லூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் இதையும் படிங்க:குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகள் கூட்டம் - திமுகவின் டி.ஆர்.பாலு பங்கேற்பு!