கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் தேன்கல்கரடு பகுதியில் வனக்காவலர்கள் சோதனை செய்து கொண்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமான இருவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
காட்டுப்பன்றி, முயல் வேட்டையாட முயன்றவர்கள் கைது - காட்டுப்பன்றி முயல் வேட்டையாட முயன்றவர்கள் கைது
கோவை: காட்டுபன்றிகள், முயல்களை வேட்டையாட முயன்ற ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் பெயர் லாரன்ஸ் (21), தருண்(16) என்பதும் முயலை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து வேட்டைக்கு பயன்படுத்த வைத்திருந்த கம்புகள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு தலா 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல் சிறுமுகை வனச்சரகம் இலுப்பந்தகம் என்ற இடத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்டுக்காய்) பயன்படுத்திய மார்ட்டின் (58), செல்வம் (48), சிலுவைமுத்து (34) ஆகிய நால்வரும் வனத்துறையினர் சோதனையில் பிடிப்பட்டனர். அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.