கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ (ESI) மருத்துவமனைக்கு அதிகமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் வயதானவர்கள் இம்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு சிகிச்சைகாக வரும் வயதானவர்கள் பலரும் நடக்க முடியாத நிலையில் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களை மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்ல சக்கர நாற்காலிகள், தூக்கு படுக்கைகள் தேவைப்படுகிறது.
மருத்துவமனைக்கு படுக்கைகள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள்
இந்நிலையில், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் மூன்று தூக்கு படுக்கைகளை இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனிடம் வழங்கினர்.
மேலும், படுக்கையை தூக்கிச் செல்லும் மருத்துவமனை உதவியாளர்களுக்கு முகக்கவசம், கையுறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் படுக்கை விரிப்புகளையும் அவர்கள் வழங்கினர்.