தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நான் பதவியேற்ற பின் 1000-க்கும்  மேற்பட்ட படுக்கைகள் அதிகரிப்பு'

கோவை: தான் பதவியேற்ற பிறகு 90 நாள்களில் 1,250 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகஇ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன்
இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன்

By

Published : Jun 2, 2021, 4:56 PM IST

Updated : Jun 2, 2021, 10:01 PM IST

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் கூறியதாவது, "30 ஆண்டுகளாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றியுள்ளேன். பிறகு ஊட்டியில் பணி உயர்வு பெற்று பணியாற்றி, அதன் பின் பணி மாறுதலாகி, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். நான் வந்த பிறகு கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

90 நாள்களில் 1000க்கும் மேற்பட்ட படுக்கைகள் அதிகரிப்பு

நான் இங்கு வரும்போது 530 படுக்கைகள் இருந்த நிலையில் தற்போது 1,250 படுக்கைகள் 90 நாள்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன. உயிரைக் கொடுத்து சொந்த மருத்துவமனை போல் நினைத்து பணியாற்றி வருகிறேன். அவ்வாறு இருக்கும்போது, சில பத்திரிகைகள் இ.எஸ்.ஐ மருத்துவமனை குறித்து குற்றச்சாட்டுகளை வெளியிடுகின்றன.

அதனை தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுப்போம். சடலத்தை எடுக்க மூன்றாயிரம் ரூபாய் கேட்பதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. நான் முன்னரிமை அடிப்படையில் பணி பெற்றபோதும், முன்னாள் அமைச்சர் தயவால் பணி ஆணை பெற்றதாக சில பத்திரிகைகள் செய்தியில் குறிப்பிடுவது மன வேதனை அளிக்கிறது.

இந்தச் செய்தி தொடர்பாக நான் பிரஸ் கவுன்சில் செல்ல உள்ளேன். இ.எஸ்.ஐ மருத்துவமனையில் PAID ATTENDERS அல்லது HOME NURSE உரிய அனுமதி பெற்றே அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் ஆள் பற்றாக்குறை காரணமாக தான் அனுமதிக்கப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.

Last Updated : Jun 2, 2021, 10:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details