தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் மருத்துவ மாணவி தற்கொலை

கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலையால் உயிரிழந்தார்.

மருத்துவ மாணவி தற்கொலை
மருத்துவ மாணவி தற்கொலை

By

Published : Apr 26, 2022, 7:32 AM IST

கோயம்புத்தூர்: சென்னை வானுவம்பேட்டையை சேர்ந்தவர் வெங்கட்வர்தன். இவரது மகள் நந்தினி (22). கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வந்தார்.

கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வந்த நந்தினி நேற்று (ஏப்.25) காலை 11.30 மணியளவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறுகையில், "அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை பயன்படுத்தி மணிகட்டு நரம்புகளை அறுத்த பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவியின் மரணம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விமானம் மூலம் மாணவியின் பெற்றோர் கோவை வந்தனர்.

அவர்கள் வந்த பிறகு மாணவியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details