கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மயூரா ஜெயக்குமாரை ஆதரித்து, கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி இன்று ஓலம்ப்ஸ், இராமநாதபுரம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கேரளத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. கூட்டணி வேட்பாளர்கள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரகசிய உடன்பாடு வைத்து செயல்படுகிறது” என்றார்.
பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரகசிய உடன்பாடு! அதனைத் தொடர்ந்து சிவானந்தா காலனி பகுதியில் மயூரா ஜெயக்குமாருக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்யுமாறு அப்பகுதி மக்களிடம் அவர் பரப்புரை மேற்கொண்டார். இப்பகுதிகளில் மலையாள மொழி பேசும் மக்கள் மிகுதியாக வாழ்ந்து வருவதால், உம்மன் சாண்டியின் பரப்புரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கோவையில் உம்மன் சாண்டி பரப்புரை! இதையும் படிங்க: கழுத்தில் ருத்ராட்சம், கையில் சிலுவை, தலையில் குல்லா.. சுயேச்சை வேட்பாளரின் பரப்புரை பாணி