கோவை:தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் இன்று (செப்.12) கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன், பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வழங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
கோவை மாவட்ட ஆட்சியரிடம் அண்ணா புகைப்படம் வைக்கக் கோரிக்கை இதுகுறித்து பேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன், 'தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டியவரே, பேரறிஞர் அண்ணா தான். தமிழ்நாடு முதலமைச்சரும் தங்களது இந்தக் கோரிக்கையை பரிசீலித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா பிறந்த நாள், சுதந்திர தினத்தினையொட்டி 40 கைதிகள் விடுதலை