தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெற்றிநடைபோடுகிறது காகிதமில்லா சட்டப்பேரவை - மனோ தங்கராஜ் - ஸ்டாலின்

காகிதமில்லா சட்டப்பேரவை மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது எனத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், mano thangaraj, mininter mano thangaraj, IT minister mano thangaraj
வெற்றிநடைபோடுகிறது காகிதமில்லா சட்டப்பேரவை

By

Published : Sep 11, 2021, 6:30 AM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 'கற்க கசடற' என்னும் தலைப்பில் கணினி அறிவியல், பொறியியல் துறையினை தமிழ் மொழியில் கற்பிக்கும் முறையை மனோ தங்கராஜ் நேற்று (செப். 10) தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது, "தாய் மொழியான தமிழில் பொறியியல் துறையில் கற்பிக்கும் முறை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர் சந்திப்பு

அடுத்து தலைமைச் செயலகம்

முதன்முறையாக இந்தத் துறைக்குத் தமிழில் பாடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் சராசரியாகப் பயிலும் மாணவர்களுக்கும் இப்பாடத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும்.

தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இயங்கும் இந்தச் சட்டப்பேரவை, காகிதமில்லா சட்டப்பேரவையாகச் செயல்படுவது அனைவரிடத்திலும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது.

இதுபோன்று காகிதமில்லா தலைமைச் செயலகம் என்ற நோக்கத்தில் அங்குள்ள மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வரும் 14ஆம் தேதிமுதல், அனைத்துப் பணிகளையும் கணினியிலேயே மேற்கொள்வது தொடர்பாக பயிற்சி அளிக்க இருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: ஊசி போட்டா பரிசு - நத்தம் பேரூராட்சியின் முயற்சி

ABOUT THE AUTHOR

...view details