கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகே ஆனை மலையைச் சேர்ந்த நாகராஜ் மகன் கௌதம் வயது (32). இவர் சேத்துமடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
வேட்டைக்காரன் புதூர் பிஏபி அலுவலகம் அருகே சென்ற போது, பயங்கர காற்று காரணமாக அப்பகுதியில் இருந்த யூகலிப்டஸ் மரம் கௌதம் மீது விழுந்துள்ளது.
இதனையடுத்து, அவ்வழியாக பயணம் செய்தவர்கள் அவரை மீட்டு வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆனைமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி 'ஜெய் பீம்' - சீமான் புகழாரம்!