தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு சிங்காநல்லூர் காமாட்சிபுரம் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கோவையில் லாட்டரி சீட்டு வியாபாரி கைது
கோவை: கேரளாவிலிருந்து லாட்டரி சீட்டுகளை எடுத்து வந்தவரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநில லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்தவர் கைது
அப்போது கேரள மாநில லாட்டரி சீட்டுகளைக் கொண்டு வந்தவரைக் காவல் துறையினர் பிடித்து விசாரித்த போது, அவர் பெயர் பிரபு (38) என்பதும் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரத்து 900 எண்ணிக்கையிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கேரள லாட்டரி சீட்டுகளை கோவையில் விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிங்காநல்லூர் காவல் துறையினர் இவரைக் கைது செய்தனர்.