ஆந்திராவிலிருந்து 30 டன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளாவிற்குச் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து அரிசி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
கோவை: ஆந்திராவிலிருந்து அரிசி லோடு ஏற்றி வந்த லாரி, கோவை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஜூன்15) அதிகாலை ஒரு மணியளவில் பட்டணம் அருகே வந்துகொண்டிருந்தபோது, சாலையோர பள்ளத்தில் லாரி தலை கீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் ரமேஷ், உதவியாளர் கணேஷ் ஆகியோர் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதற்கிடையே, லாரியில் இருந்து சிதறிய அரிசி மூட்டைகளில் இருந்து சிந்திய அரிசி, ரேஷன் அரிசியைப் போலவே இருந்ததால் அப்பகுதி மக்கள் சூலூர் வட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர். பின்னர் இந்த அரிசி குறித்து அலுவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.