உள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம் - election duty
கோவை: மாநில தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் ஆய்வுக் கூட்டத்தில் தேர்தல் பணிகள், இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைப்பெற்றது. அதில் மாநில தேர்தல் அலுவலர் பழனிச்சாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர் தலைவர் ராசாமணி, மூன்று நகராட்சிகள், 37 பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றின் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி கோவையில் தேர்தல் பணிகள், வார்டு வரையறைகள், இட ஒதுக்கீடு போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.