தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

lizard inside sealed Packet: பிரபல நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட்டில் பல்லி... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்! - கோயம்புத்தூரில் பிரபல தனியார் நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட்டில் பல்லி

பிரபல தனியார் நிறுவன ரஸ்க் பாக்கெட்டை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவருக்கு, ரஸ்க் பாக்கெட்டில் பல்லி(lizard inside sealed Packet) இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

lizard in rusk  lizard in britania rusk Pocket  britania tea rusk  lizard in the famous brand rusk  lizard in the famous brand rusk in coimbatore  food safety officer  rusk  britania  lizard  பல்லி  ரஸ்க்  பிரட்டானியா ரஸ்க்  ரஸ்க்கில் கிடந்த பல்லி  கோயம்புத்தூரில் பிரபல தனியார் நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட்டில் பல்லி  ரஸ்க் பாக்கெட்டில் கடந்த பல்லி
ரஸ்க் பாக்கெட்டில் பல்லி

By

Published : Nov 23, 2021, 3:45 PM IST

Updated : Nov 23, 2021, 7:21 PM IST

கோயம்புத்தூர்: கணபதியைச் சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவர், நான்கு நாள்களுக்கு முன்பு அதேபகுதியிலுள்ள கடையில், பிரபல தனியார் நிறுவனத்தின் பெயர்கொண்ட ரஸ்க் பாக்கெட்டை வாங்கியுள்ளார்.

அதனை சாப்பிடுவதற்காகப் பிரித்த போது, பல்லி(lizard inside sealed Packet) இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரது குடும்பத்தார்கள் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பிரபல நிறுவனத்தின் ரஸ்க்கில், இது போன்று பல்லி இருப்பது கவனக்குறைவால் ஏற்பட்டதாகவும், இது குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் 1.22 கிலோ தங்கம் பறிமுதல்

Last Updated : Nov 23, 2021, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details