தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Library: டிஐஜி அலுவலகத்தில் நூலகம் - காவலர்களின் பணிச்சுமையை குறைக்க ஏற்பாடு

Library:காவல் துறையினருக்கு பணி சுமையைப் போக்குவதற்கும், வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்கும் கோவை டிஐஜி அலுவலகத்தில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

டிஐஜி முத்துச்சாமி
டிஐஜி முத்துச்சாமி

By

Published : Dec 24, 2021, 4:01 PM IST

கோயம்புத்தூர்:Library:பந்தய சாலையிலுள்ள டிஐஜி அலுவலகத்தில், காவலர்கள், அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள், அவர்களது உறவினர்கள் ஆகியோர் பயன்படுத்தும்படியான நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பணி மற்றும் குடும்ப ரீதியான மனச்சோர்வை நீக்கவும், பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் புத்தகம் இன்றியமையாததாக உள்ளது. இந்நிலையில் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நூலக திறப்பு விழா டிஐஜி முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டப்புத்தகம், தன்னம்பிக்கை எழுத்தாளர்கள் புத்தகம், காவல் துறையின் செயல்பாடுகள் குறித்த புத்தகம், மனித நேயம் சார்ந்த புத்தகம் உள்ளிட்டப் பல வகையான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிஐஜி முத்துசாமி, 'தனியார் நகர்ப்புற தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நாங்கள் இந்த நூலகத்தை அமைத்துள்ளோம். தமிழ்நாட்டில் இந்த நூலகம் முதன்மையாக அமைந்துள்ளது' எனத் தெரிவித்தார்.

டிஐஜி முத்துசாமி

தொடர்ந்து கோடநாடு விசாரணை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், 'விசாரணையில் இருப்பதால் அதைப் பற்றி பேசக்கூடாது. விசாரணையின் தன்மையை சொன்னால் அடுத்த கட்ட விசாரணை பாதிக்கும். ஆனால், தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

இதையும் படிங்க:குளிர்பானத்தில் மயக்க மருந்து; ரயில் பயணிகளிடம் கைவரிசை - இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details