கோயம்புத்தூர்:வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய வால்பாறை பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, காட்டு மாடு, காட்டு யானைகள் ஆகிய விலங்குகள் அதிக அளவில் உள்ளன. நகரப்பகுதி கக்கன் காலனி, ராஜீவ் காந்தி நகர், துளசி நகர் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தேயிலைத் தோட்டத்தை விட்டு சிறுத்தைகள் மாலை, இரவு நேரங்களில் சாலைகளில் உலா வருகின்றன.
வால்பாறையில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகும் சிறுத்தைக் கூட்டம்! - leopard roaming in valparai
வால்பாறை நகரப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் இரவில் யாரும் வெளியே வரவேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வால்பாறை சாலைகளில் நள்ளிரவில் நடமாடும் சிறுத்தைக் கூட்டம்
அந்த வகையில், நேற்று (ஜூலை.10) நள்ளிரவு கக்கன் காலனி பகுதியில் மூன்று சிறுத்தைகள் சாலையில் உலா வந்தது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்
இதையும் படிங்க: தொடர் மழை - உபரி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை