தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வால்பாறை அருகே சிறுத்தையைக் கொன்ற புலி - coimbatore news tiger attacks

கோயம்புத்துார்: வால்பாறையை அடுத்த வெள்ளமலை மட்டம் தேயிலைத் தோட்டத்தில் புலி ஒன்று சிறுத்தையை தாக்கிக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்துார்: வால்பாறையை அடுத்த வெள்ளமலை மட்டம் தேயிலை தோட்டத்தில் புலி ஓன்று சிறுத்தையை தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்துார்: வால்பாறையை அடுத்த வெள்ளமலை மட்டம் தேயிலை தோட்டத்தில் புலி ஓன்று சிறுத்தையை தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By

Published : Jan 27, 2020, 3:38 PM IST

வால்பாறையில் புலி, சிறுத்தை, காட்டு யானைகள் என பல வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் வால்பாறையை அடுத்த தேயிலைத் தோட்டத்தில் துர்நாற்றம் வீசுவதை அறிந்த தோட்டக் காவலர்கள் அந்தப் பகுதியை பார்வையிட்டனர். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வால்பாறை அருகே சிறுத்தையைக் கொன்ற புலி

சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி வன உயிரின மேலாண்மை மையத்திற்கு கொண்டுசென்றனர். ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் மாரிமுத்து இறந்த சிறுத்தையை பார்வையிட்டு விசாரணைக்கு உத்திரவிட்டார்.

இதையடுத்து இறந்த சிறுத்தையை உடற்கூராய்வு செய்தபோது சிறுத்தையின் வயது இரண்டு என்றும், சிறுத்தையை புலி தாக்கி கொன்று சாப்பிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுத்தையின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க :ஊருக்குள் புகுந்த சிறுத்தை - மக்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details