கோயம்புத்தூர்: மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள கோவைபுதூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், டிசம்பர் 28ஆம் தேதி இரவு குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் வந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாயைக் கடித்துக் கொன்றது.
காலையில் இத்தகவலறிந்த கல்லூரி ஊழியர்கள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் சிறுத்தை கால்தடத்தை ஆய்வுசெய்து சிறுத்தையின் நடமாட்டத்தை தற்போது கண்காணித்துவருகின்றனர்.
கோயம்புத்தூரில் குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியில் சிறுத்தை வந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: டிச 31 இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்குத் தடை : சென்னை காவல் துறை