கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே அரக்கடவு, மூணு குட்டை என இரண்டு மலை கிராமங்கள் உள்ளன. வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர்.
வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கிராமங்களில் சாலை குண்டும் குழியுமாக இருக்கும், இதனால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சென்று வருவதில் மக்களுக்கு கடும் சிரமம் இருந்துள்ளது.
சாலை வசதி இல்லாத கிராமங்கள்: உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிக்க முடிவு! மேலும், சாலை வசதி இல்லாததால் நியாய விலைக் கடையில் இருந்து அரிசியை வெகு தூரம் சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளிட்ட பல சிக்கல்கள் இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக அரசு பலமுறை வாக்குறுதி அளித்தும் தார்சாலை வசதி அமைத்துத் தராததைக் கண்டித்து, ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க இரண்டு மலை கிராம மக்கள் முடிவு செய்து அதனை மனுவாக எழுதி அம்மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு!