கோயம்புத்தூர்: பத்திரிகையாளர் மன்றத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோவை தங்கம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "நான் சிந்துஜா எனும் அந்தப் பெண்ணை பார்த்ததே இல்லை. தொலைபேசியில்கூட பேசியது இல்லை. பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அபாண்டமாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் கூறுவதில் உண்மையில்லை.
என் மீது புகார் கொடுத்தால் விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக பொய் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். நான் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் இருந்து வருகிறேன். மாதம் ஒரு முறை தான் வீட்டிற்கு வந்து செல்வேன். அவரை மிரட்டியதற்கான ஒரு ஆதாரத்தை காட்டினால் கூட நான் சிறை செல்லத் தயார்.
தற்போது பணம் கேட்டு மிரட்டி வரும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பெண்ணின் குடும்பத்தார் யாரும் இதுவரை என்னிடம் பேசவில்லை. இவ்விவகாரத்தில் என்னை ஒடுக்க வேண்டும் என சில அரசியல் கட்சியினர் அப்பெண்ணிடம் சொல்லி இருக்கின்றனர்.