தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவை தண்டு மாரியம்மன் கோயில் அக்கினிச் சட்டி ஊர்வலம்! - Kovai Thandu Mariamman Temple

கோவை: அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயிலில் அக்கினிச் சட்டி ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.

கோவை தண்டு மாரியம்மன் கோயில் அக்கினி சட்டி ஊர்வலம்!

By

Published : Apr 24, 2019, 5:28 PM IST

கோவையின் பிரசித்திப்பெற்ற பழமையான அம்மன் ஆலயம்தான் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த வாரமே தொடங்கியது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான அக்கினிச் சட்டி ஊர்வலம் இன்று கோலகலமாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலையிலேயே டவுன்ஹால் பகுதியிலுள்ள கோவையின் காவல் தெய்வமான அருள்மிகு கோனியம்மன் கோயிலில் திரண்டு, அங்கிருந்து சக்திகரகம் மற்றும் அக்கினிச் சட்டி ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவை தண்டு மாரியம்மன் கோயில் அக்கினி சட்டி ஊர்வலம்!

ABOUT THE AUTHOR

...view details