தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு

ஆ.ராசா குறித்தும், தந்தை பெரியார் குறித்தும் இழிவாக பேசியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி சிறைக்கு சென்று திரும்பிய நிலையில், மீண்டும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு
பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு

By

Published : Oct 9, 2022, 6:15 AM IST

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குறித்தும், தந்தை பெரியார் குறித்தும் இழிவாக பேசியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி செப். 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீளமேடு காவல் நிலையம் முன்பு பாஜகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.

அப்போது முதலமைச்சர் புகைப்படங்களை கிழித்தும், கொடும்பாவி எரித்தும் ரகளையில் ஈடுபட்ட 11 பாஜகவினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே பாலாஜி உத்தம ராமசாமிசிறையில் இருந்து வெளியே வந்தார். அதைத்தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட 11 பேருக்கும் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் நேற்று(அக்.07) மாலை சிறையில் இருந்து வெளியில் வந்தனர்.

பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு

அவர்களுக்கு ஏராளமான பாஜகவினர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பாலாஜி உத்தம ராமசாமியும் இருந்தார். மேளம் அடிக்க காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும், தொடர்ந்து மேளம் அடித்ததால் காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால், பாலாஜி உத்தம ராமசாமி உட்பட 6 பேர் மீது ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:காங்கிரஸ் தலைவர் தேர்தல் - சசி தரூருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு

ABOUT THE AUTHOR

...view details