தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெள்ளப்பெருக்கால் பேரூர் தரைப்பாலம் உடைப்பு - பொதுமக்கள் அவதி - நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு

கோவை: பேரூரில் அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

perur-bridge

By

Published : Oct 31, 2019, 12:00 PM IST

கோவையில் பட்டீஸ்வரர் கோயில் அருகே உள்ளது பேரூர் பாலம். வீரகேரளம், வேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் இந்த பாலத்தை போக்குவரத்துக்காக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை காலத்தில், நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலத்தின் மேல் அதிக அளவு வெள்ள நீர் சென்றது. இதனால், பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அப்பகுதியில் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, நொய்யலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தற்காலிக தரைப்பாலத்தின் ஒருபகுதி அடித்துச் செல்லபட்டது. இதனால் பொதுமக்கள் அவ்வழியை கடந்து செல்ல சிரமம்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் உடனடியாக பாலம் கட்ட வேண்டும் என்றும், அதுவரை மாற்று பாதை அமைத்து தரவேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழையால் நொய்யலாற்றின் தரைப்பாலம் உடைப்பு!

முக்கிய செய்திகள்:

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்: பிரதமர் மோடி இன்று மரியாதை...!

இரண்டு யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிகிறது ஜம்மு-காஷ்மீர்!

ABOUT THE AUTHOR

...view details