தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் விழிப்புணர்வு கல்வி தேவை - மாதர் சங்கம் வலுயுறுத்தல்

கோவை: அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் பாலியல் விழிப்புணர்வு குறித்த கல்வியை நடத்தவேண்டும் என்று மாதர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மாதர் சங்கம்

By

Published : Nov 22, 2019, 4:22 PM IST

இது தொடர்பாக அனைத்து இந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்களைத் தடுக்க கோரியும், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தயும் மாவட்ட அளவிலானக் குழு ஒன்று அமைத்திட வேண்டும் என்றும் போஸ்கோ சட்டம் குறித்து ஆசிரியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரியும், அச்சட்டத்தில் கைதானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் வலுயுறுத்தப்பட்டது.

சங்கங்களை சேர்ந்தவர்கள் பாலியல் வன்கொடுமையை எதிர்த்தும் பாலியல் கொடுமை செய்பவர்களை கைது செய்ய கோரியும் முழக்கமிட்டனர்.

மாதர் சங்கத்துடன் இந்திய ஜனநாயகம் வாலிபர் சங்கமும் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துனர்

அதன்பின் பேசிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் கனகராஜ், "கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது என்றும் அதை தடுத்து நிறுத்த போஸ்கோ சட்டம் பற்றி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுக்கு வாரம் ஒருமுறை பாலியல் பாடம் நடத்த வேண்டும்" எனக் கூறினார்.

ஜனநாயகம் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பேட்டி

இதைத் தொடர்ந்து பேசிய மாதர் சங்க உறுப்பினர் ஜூலி, "பாலியல் பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆசிரியர்களை தெய்வங்களாக நினைத்து தான் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றோம். ஆனால் ஒரு சில ஆசிரியர்கள் தவறாக நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது. மேலும் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details