கோவை கீரணத்தம் கல்லுக்குழிப் பகுதியைச் சேர்ந்தவர் முருகனின் மகள் நந்தினி (21). இவர், கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நந்தினிக்கு சங்கனூரைச் சேர்ந்த தினேஷ் உடன் காதல் இருந்ததாகத் தெரிகிறது.
இருவரும் சிறுவயது முதலே ஒன்றாக படித்து வந்துள்ளனர். இருவரும் பல நாட்களாக காதலித்து வந்த நிலையில், தினேஷ் நந்தினியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். தனது பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல், நான் திருமணம் குறித்து முடிவு செய்ய முடியாது என்று நந்தினி கூறிவந்துள்ளார்.
கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணத்தைப் பற்றி வீட்டில் கூறலாம் என்றும், தினேஷிடம் பலமுறை கூறிவந்துள்ளார். எனினும் அதை பொருட்படுத்தாத தினேஷ் நந்தினி செல்லும் இடங்களுக்குச் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக, நந்தினி தினேஷிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதி மதியம் நந்தினியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த நந்தியினிடம், திருமணத்தைப் பற்றியே பேசியதால் கோபமடைந்த நந்தினி அதற்கு மறுத்து பேசியுள்ளார்.