கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆவி வினோத். இவர் மீது கொலை முயற்சி, வெடிபொருட்கள் பயன்படுத்தியது, அடிதடி என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யபட்டு கைது செய்யபட்டிருந்தார்.
பிரபல ரவுடி கைது: கோவை போலீஸ் அதிரடி! - கோவை போலிஸ் அதிரடி
கோவை: கொலை முயற்சி வழக்கிலிருந்து ஜாமினில் வெளிவந்த பிரபல ரவுடியை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
பிரபல ரவுடி கைது: கோவை போலிஸ் அதிரடி
கோவை மாவட்ட நிர்வாகத்திடம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110-ன்படி எழுத்துப் பூர்வமாக இனி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என உறுதியளித்ததால் ஜாமினில் வினோத் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே சமீபத்தில் ஒரு அடிதடி சம்பவத்தில் ஈடுபட்டதால் அவர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.