கோவை கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள 123 வீடுகளுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் ஒதுக்கி, அவர்களை கீரணத்தம் பகுதிக்கு குடியேறுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது, ஆனால் அங்கு செல்ல மறுத்த மக்கள் ஜீவா நகரிலேயே வசித்து வந்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு: சலையில் பரிதவிக்கும் பொதுமக்கள்! - கோவை மாநகராட்சி
கோவை: கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை, மாநகராட்சி இடித்ததால் அப்பகுதியினர் அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பதற்றம் நிலவியது.
மேலும் மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜீவா நகர் மக்கள் வழக்கு தொடுத்திருந்த நிலையில் நேற்று காலை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மாநகராட்சி அலுவலர்கள் திடீரென்று ஐந்து பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வந்து 15 வீடுகளை இடித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேற்படி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதின் நகலை பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்களிடம் காட்டியதைத் தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வீடுகளை இழந்த ஆதங்கத்தில் மக்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.