கோவையில் 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, கோவை மாநகரின் 11 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷா, முகமது அன்சாரி உள்பட 168 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், 14 பேருக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய முஜிபுர் ரகுமான் என்ற முஜி, சாதிக் என்கிற ராஜா ஆகிய இருவர் தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்கள் மீது மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களது வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை வைத்து, போலீசார் தேடி வருகின்றனர்.