கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகில் உள்ள ஒரு குடோனில் கலப்பட தேயிலைத் தூள் தயாரிக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் வந்தது.
அதைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற உணவுப் பாதுகாப்புத் துறையினர் அந்த குடோனிலிருந்து ரூ.4.25 லட்சம் மதிப்புடைய சுமார் இரண்டு டன் எடையுள்ள கலப்பட தேயிலை தூளை பறிமுதல் செய்தனர். அப்போது அதில் ஈடுபட்ட ஹசுல் ஹமீத் என்பவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
அலுவலர்கள் அவரைப் பிடித்து விசாரித்தபோது, தான் இங்கு சப்ளையராக வேலை செய்வதாகவும் இதன் உரிமையாளர் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த செரிப் என்றும் கூறினார்.
இதனையடுத்து காவல் துறையினர் ஹசுல் ஹமீதை கைது செய்து, அங்கேயிருந்த இரண்டு டன் கலப்பட தேயிலை தூள், அதை பாக்கெட் செய்யும் ரூ.1.5 லட்சம் மதிப்புடைய இயந்திரத்தையும் பறிமுதல்செய்தனர். மேலும் உரிமையாளர் செரிப்பை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
ஈச்சனாரியில் 2 டன் போலி தேயிலை தூள் பறிமுதல்! இதையும் படியுங்க: குன்னூரில் ஸ்பெஷாலிட்டி தேயிலைத் தூள் கண்காட்சி!