கோவையில் மூன்றாம் ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை எட்டு மணிக்குத் தொடங்கியது. இதில், 900 மாடுகளும் 820 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். போட்டி தொடங்குவதற்கு முன் மாட்டிற்குப் பூஜை செய்து உறுதிமொழி எடுத்தனர்.
இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஈஷா ஜக்கி வாசுதேவ், எஸ்.பி. அன்பரசன், பொள்ளாச்சி ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியினை கண்டுகளித்தனர். சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் திறமையாக அடக்கியது மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.