கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், இதுவரை 210-க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன், அதிமுக பிரமுகர்கள் சஜீவன், சஜீவனின் சகோதரர் சிபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, அவரது மகன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக பணியாற்றி வந்த பூங்குன்றனிடம் நேற்று வரை 3 நாட்கள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் போலீசார் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.