தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அதிமுகவின் அறிவிப்பால் எதிர்க்கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும்' - ஈஸ்வரன் - கோவையில் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர் சந்திப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அதிமுக தலைவர்களின் அறிவிப்பு எதிர்க்கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்
கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

By

Published : Apr 8, 2021, 12:26 PM IST

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், "வாக்கு எண்ணிக்கை வரை ஒரு மாத காலத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தபோது வராத பயம் அதிமுக தலைவர்கள் அறிவித்தபோது அதிகரித்துள்ளது.

அதிமுக தலைவர்களின் அறிவிப்பு எதிர்க்கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் திமுக கூட்டணிக் கட்சியினர் விழிப்புடன் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும்.

கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்
திமுக வெற்றி பெறும் எனத் தெரிந்த பிறகு எதிர்க்கட்சியினர் அனைவரும் நிம்மதி இழந்துள்ளனர். தோல்வி உறுதி என்பதைத் தெரிந்துகொண்டதால் அதிமுக தொண்டர்கள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டவில்லை.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தவுடன் அதிமுக தொண்டர்கள் தோய்வடைந்துவிட்டனர். மேலும் எதிர்க்கட்சியினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் வேலையைப் பல இடங்களில் செய்துவருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details