கோவை:பொள்ளாச்சி கடைவீதியில் 500-க்கும் மேற்பட்ட நகை கடைகள், நகை பட்டறைகள் உள்ளன. கடைவீதியில் உள்ள சுப்ப அண்ணன் ஜீவல்லரிக்கு நேற்று முன்தினம் (ஜூலை 4) வந்த அடையாளம் தெரியாத நபர் தனக்கு ஆரம் வேண்டும் என உரிமையாளர் உதயகுமாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒவ்வொரு நகையாக டிசைன்களை காண்பித்தபோது அந்த வாடிக்கையாளர் திடீரென அங்கிருந்த 6 பவுன் நகையை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தார்.
தொடர்ந்து கடையின் உரிமையாளரும் அவரை துரத்தி பிடித்தார். இதனிடையே நகையை திருடி சென்றவருக்கும் கடையின் உரிமையாளருக்கும் நடுவே ஏற்பட்ட கைகலப்பில் நகை கடையின் உரிமையாளருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவரை அப்பகுதியினர் மீட்டு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டு சேர்ந்தனர்.