கோவை:மேட்டுப்பாளையம் அடுத்த பெரியநாயக்கன்பாளையம் எல்லைக்குட்பட்ட அத்திப்பாளையம்-வீரபாண்டியில் சாலையில் நேற்று (ஆக.20) போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளா பதிவு எண் கொண்ட கார் அவ்வழியாக வந்தது. அந்த காரை சோதனையிட்டதில் போதைப்பொருள் கடத்திவரப்பட்டிருப்பது தெரியவந்தது.
கோவையில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்... ஒருவர் கைது...
கோயம்புத்தூரில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள எல்.எஸ்.டி ஸ்டாம்ப் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனிடையே காரில் வந்த இருவரில் பூபாலன் என்பவர் தப்பியோடினார். சிவராமனை என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டார். காருடன் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. முதல்கட்ட தகவலில் இருவரும் திருச்சூரைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.18 லட்சம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சிவராமன் ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் 32 கிலோ கஞ்சா கடத்தியதற்காக இரண்டரை வருடம் சிறையில் இருந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: அவசரநிலையில் அன்று பிடில் வாசித்த ரோம் மன்னன்...இன்று போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்...