கோயம்புத்தூர்:தங்க நகை கடத்தல் வழக்கில் கோவை நகை பட்டறை உரிமையாளர் வீட்டில் சோதனையிட்ட என்.ஐ.ஏ அலுவலர்கள், விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
என்.ஐ.ஏ விசாரணை முடிந்து அழைத்துச் செல்லப்பட்ட நந்தகோபால்! - nia takes nandhagopal
கேரள தங்க நகை கடத்தல் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள், இன்று (செப்., 9) கோயம்புத்தூரில் நகைப் பட்டறை உரிமையாளர் நந்தகோபால் வீட்டில் சோதனை செய்தனர். இதில் 38 சவரன் நகைகளுடன் 2.75 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரளா தங்க நகை கடத்தல் வழக்கில் இன்று (செப்டம்பர் 9) காலை தேர்முட்டி பகுதி பவிழம் வீதியில் தங்கப் பட்டறை உரிமையாளர் நந்தகோபால்(41) வீட்டில் என்ஐஏ அலுவலர்கள் காலை 6 மணி முதல் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையின் முதற்கட்டமாக 38 சவரன் தங்க நகைகள், 2.75 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நந்தகோபாலை என்ஐஏ அலுவலர்கள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.