கோயம்புத்தூர்:அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், பல்வேறு துறைகளில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட விஞ்ஞானிகளில் முதல் 2 விழுக்காட்டினரின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியல், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வல்லுநர் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், ஹைச் - இன்டெக்ஸ், ஹெச்எம் - இன்டெக்ஸ், பிற விஞ்ஞானிகளின் ஆய்வில் மேற்கொள் காட்டப்பட்டது போன்ற தரப்படுத்தப்பட்ட தரவுகள் (Standardized Information) மூலம் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிகம் மேற்கொள்காட்டப்பட்டவர்கள்
22 அறிவியல் துறைகள், 176 துணை துறைகள் சார்ந்த விஞ்ஞானிகள், குறிப்பாக, இந்தத் துறைகளில் குறைந்தபட்சம் ஐந்து ஆய்விதழ்கள் வெளியிட்டவர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவின் பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தின் (KITS) நான்கு பேராசிரியர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேரா. காட்சன் ஆசிர்வாதம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறையின் பேரா. ஜூட் ஹேமந்த், சிவில் இன்ஜினியரிங் துறை பேரா. சிநேகா கௌதம், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையின் பேரா. இமானுவேல் செல்வகுமார் ஆகியோர் அதிக மேற்கொள் காட்டப்பட்ட தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால் தினகரன், துணை வேந்தர் பி.மன்னர் ஜவஹர், பல்கலை., பதிவர் எலைஜா பிளசிங் மற்றும் பிற பேராசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Bhopal Fire: மருத்துவமனையில் தீ விபத்து: 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு