தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தை ஆதரித்த தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்றி' - பெங்களூரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா

கோவை: மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருப்பதை ஆதரித்த தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

தேஜஸ்வி சூர்யா

By

Published : Sep 26, 2019, 10:35 PM IST

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தான 370-ஐ நீக்கியது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாஜக கூட்டம் நடத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூரு தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

முன்னதாக இளைஞர்களிடையே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கியது குறித்து அவர் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு இளைஞர்கள் ஆதரவளித்திற்கு நன்றியினைத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 370ஆவது பிரிவு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையில் நிர்வாகம், உளவியல் தடையை உருவாக்கியதுடன் பிரிவினைவாதத்தை உயிருடன் வைத்திருந்ததாகவும் பயங்கரவாதத்தை தூண்டும் பாகிஸ்தானால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகச் செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக இளைஞர் அணி துணை தலைவர் முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேஜஸ்வி சூர்யா பேட்டி

மேலும் படிக்க: காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள வீட்டில் நகை, பணம் கொள்ளை...

வெள்ளிப் பதக்கம் வென்று மேடியை மகிழ்ச்சியடையச் செய்த வேதாந்த்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details