தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்! - சென்னை

சென்னை: கிண்டியில் ஜூலை 26ஆம் தேதி அரசு வேலைவாய்ப்புத் துறை சார்பில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

By

Published : Jul 26, 2019, 8:17 AM IST

இது குறித்து தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

”சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அனைத்தும் இணைந்து கிண்டியிலுள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் ஜூலை 26ஆம் வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. முகாமில் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்த 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்குபெறலாம். ஜூலை 26ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 044 – 22501525, 22505002, 22505006 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details