பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, சின்னாம்பாளையம், ஊஞ்சவேலம்பட்டி, சோழபாளையம், மாக்கினாம்பட்டி ஆகிய ஊராட்சிகளில், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்த அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு! - ஜல்லிக்கட்டு
கோவை: மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்த பின் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள் குறித்து உரிய அறிவிப்பு வெளியாகும் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “ தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் பகுதிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்தபின், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் உரிய அறிவிப்பு வெளியிடப்படும். ஜல்லிக்கட்டுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன “ என்றார்.
இதையும் படிங்க: அழகிரியை தவிர்த்துவிட்டு திமுக ஆளுங்கட்சியாக வர முடியாது - அமைச்சர் செல்லூர் ராஜு