கோயம்புத்தூர்:கோவையில் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை ஐந்தாவது நாளாக நீடித்து வருகிறது.
நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் இல்லம், சந்திரசேகரின் தம்பி செந்தில் பிரபு இல்லம், சந்திரசேகரின் பெற்றோர் வீடு, ஆலயம் டிரஸ்ட், கே.சி.பி நிறுவன செயல் இயக்குநர் கார்த்திகேயன் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை முடிந்து இருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் உதவியாளரான சந்தோஷ் சகோதரர் வசந்தகுமார் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.