தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈஷா சத்குருவின் ஓவியம் ரூ.2.3 கோடிக்கு விற்பனை! - ஈஷா அவுட்ரீச்

ஈஷா தியான மையத்தை நடத்திவரும் சத்குருவின் ஓவியம் ரூ.2.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ‘சிர்கா 2020’ (circa 2020) எனும் தலைப்பில் வரையப்பட்ட இந்த ஓவியத்திற்கு கிடைத்த பணத்தை கரோனா நிவாரண பணிகளுக்காக அவர் வழங்கியுள்ளார்.

isha supported for corona relief works
isha supported for corona relief works

By

Published : Feb 4, 2021, 10:07 PM IST

கோயம்புத்தூர்: ஈஷா சத்குரு கரோனா நிவாரண பணிகளுக்காக மேலும் ரூ.2.3 கோடி வழங்கியுள்ளார்.

சத்குரு தனது 3ஆவது ஓவியத்தை விற்று இந்த தொகையை வழங்கியுள்ளார். இதற்கு முன்பு 'முழுமையாக வாழ்’ என்ற தலைப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவ் வரைந்த முதல் ஓவியம் ரூ.4.14 கோடிக்கும், ஈஷாவின் கம்பீரமான ‘பைரவா’ காளையின் நினைவாக வரைந்த ஓவியம் ரூ.5.1 கோடிக்கும் ஏலம் போனது. அதன் மூலம் வந்த நிதிகளையும் சத்குரு கரோனா நிவாரணப் பணிகளுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நிவாரண பணிகளுக்காக சத்குரு, ‘circa 2020' என்ற தலைப்பில் வரைந்த 3ஆவது ஓவியத்தின் மூலம் இந்நிதி திரட்டப்பட்டுள்ளது. ஈஷா அவுட்ரீச் அமைப்பானது, கிராமப்புற மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு உதவிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து கிராம மக்களுக்கு தேவையான பல்வேறு நிவாரண உதவிகளை செய்ய ஈஷா அவுட்ரீச் தொடங்கியது.

ABOUT THE AUTHOR

...view details