இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ’சத்குரு சென்டர் எ கான்ஷியஸ் பிளானட்' என்ற பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் மனிதர்களின் விழிப்புணர்வு, அறிவாற்றல், மற்றும் கருணை ஆகிய மூன்று அம்சங்களின் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் எப்படி மேம்படுகிறது என்பதனை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்ய தொடங்கப்பட்டுள்ளது. பெஸ்ட் இஸ்ரேல் மையமானது, ஈஷா யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரும் தன்னார்வலர்களை கொண்டு தியான பயிற்சிகள் மூலம் உடலில் நடக்கும் மாற்றங்களை மருத்துவ ரீதியாக ஏற்கனவே ஆய்வு செய்து வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வான உலகிற்கு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சத்குரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்!
சென்னை: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவின் பெயரில் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
foundation
இதுகுறித்து அம்மையத்தின் இயக்குநர் டாக்டர் பாலசுப்ரமணியம் பேசியபோது, இந்த பிரத்யேக மையத்தின் மூலம் மருத்துவம் மற்றும் சிந்தனை அறிவியலை ஒருங்கிணைத்து நோயாளிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிய உள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவந்த இருவர் கைது
Last Updated : Nov 27, 2020, 3:50 PM IST