தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’எதிர் செயல் செய்யாமல் பதில் செயல் செய்வோம்' - ஜக்கி வாசுதேவ்

கோவை: எதிர் செயல் செய்யாமல் விழிப்புணர்வாக பதில் செயல் செய்வோம் என ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

vasudev
vasudev

By

Published : Dec 31, 2020, 12:13 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ நம் அனைவர் வாழ்வையும் தலைகீழாக புரட்டிப்போட்டதில், 2020ம் ஆண்டு இந்த தலைமுறை மீது அழிக்க முடியாத சுவடை பதித்திருக்கிறது. மிக மோசமான சூழலியல் அழிவின் அறிகுறிகள் தெரியத் துவங்கியிருக்கும் இவ்வேளையில், வருங்கால சந்ததியினருக்காக நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு முயற்சிகள் எடுப்பதில் நாம் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய சமயத்தில், இந்த வைரஸ் பெருந்தொற்று நம் அனைவரையும் தடுமாற வைத்திருக்கிறது.

எனினும், இந்தப் பெருந்தொற்று நம்மை பெரும் அவதிக்கு ஆளாக்கினாலும், குடிமக்கள் விழிப்புணர்வாகவும் பொறுப்பாகவும் செயல்பட்டால், இதை நம்மால் நிறுத்த முடியும். எதிர்செயல் செய்யாமல் விழிப்புணர்வாக பதில் செயல் செய்யும் மனித ஆற்றலில்தான் தீர்வு இருக்கிறது. இந்தப் பெருந்தொற்றைத் தாண்டி வருவதற்கு மட்டுமல்ல, அதிக நாகரிகமும் நிலைத்தன்மையும் மிகுந்த உலகிற்கான புதிய சாத்தியங்கள் உருவாக்குவதற்கும் இதுதான் தீர்வு.

வரும் ஆண்டில், நம்மை நாமே மேலான மனிதர்களாக்கிக்கொண்டு, அதன்மூலம் இன்னும் மேன்மையான உலகை உருவாக்குவதற்கான துணிவும், உறுதியும், விழிப்புணர்வும் நம் அனைவருக்கும் இருக்க வேண்டும். முன்நோக்கிச் செல்ல வேதனைப்படுவது வழியல்ல, அனைத்து உயிர்களுக்கும் அர்த்தமுள்ளதாக இருக்கக்கூடியதை உருவாக்குவதற்கு, நம்மை அர்ப்பணிப்பதுதான் வழி “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்: ஆண்டாளிடம் ஆசிபெற்ற முதலமைச்சர் பழனிசாமி!

ABOUT THE AUTHOR

...view details